Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எல்லாநா னாதலினா லப்பி லினிமையுநான்
சொல்லார் மதியிரவிச் சோதியுநான்-நல்லார்க
ளோங்காரம் வேதத் துயர்விண் மிசைச்சத்தம்
பாங்குநர ரிற்பௌ ருடம்.       7.8

எல்லாம் நான் ஆதலினால்

எல்லாப் பொருள்களும் நானேயாயிருப்பதால்

அப்பில் இனிமையும் நான்

நீரில் நற்சுவையாயிருப்பவன் நானே

சொல் ஆர் மதி இரவி சோதியும் நான்

அனைவராலும் புகழப்படும் சந்திரனிடமும், ஸூர்யனிடமும் உள்ள ஒளியும் நானே

வேதத்து நல்லார்கள் ஓங்காரம்

வேதத்தினுள் நல்லவர்கள் விரும்பும் ஓங்காரம் நானே

உயர் விண்மிசை சத்தம்

உயர்ந்திருக்கும் ஆகாயத்தில் ஶப்த குணமும் நானே

பாங்கு நரரில் பௌருடம்

ஆண்மையுடைய ஆண்களின் ஆண்மை நானே.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top