Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இப்புவிநற் கந்த மெரியிலொளி யெப்பொருட்குங்
கைப்படுயிர் சத்தை கருதுங்கா லொப்பிலா
நற்றவத்தோர் மாட்டு நலஞ்சிறந்த நற்றவநான்
பற்றலர்கள் கோளரியே பார்.     7.9

பற்றலர்கள் கோளரியே

எதிரிகளை அடக்கும் சிங்கம் போன்றவனே!

இப்புவி நல் கந்தம்

இந்த பூமியில் நல்லமணம் நானே

எரியில் ஒளி

அக்நியின் ஒளி நானே

கருதுங்கால்

ஆராய்ந்து பார்த்தால்

எப்பொருட்கும் உயிர் கைப்படு சத்தை

எல்லா ஜீவராசிகளிடமுள்ள ஸத்தை நானே

ஒப்பு இலா நல் தவத்தோர் மாட்டு நலம் சிறந்த நல் தவம் நான்

ஓப்பில்லாத நல்ல தவத்தை உடையவர்களிடமுள்ள சிறப்பு மிக்க நல்ல தவமும் நானே

பார்

இதைக் காண்பாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top