Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னில்வே றாகிமிக் கிங்கோர் பொருளுளதென்
றுன்னிலாங் கில்லை யுயர்விசயா-மன்னியநூன்
மாமணிபோற் கோப்புண்டு வந்தே யென்பாலிதெல்லாஞ்
சேமமுற நிற்குஞ் செறிந்து.       7.7

உயர் விசயா

உயர்ந்தவனான அர்ஜுனா!

என்னில் வேறாகி

என்னைக்காட்டிலும் வேறாயிருப்பதாய்

மிக்கு

மேலாயிருப்பதான

ஓர் பொருள் இங்கு உளது? என்று உன்னில்

ஒரு பொருள் இவ்வுலகில் உள்ளதோ? என்று ஆராய்ந்தால்,

ஆங்கு இல்லை

அப்படி இல்லை

மன்னிய நூல் மாமணி போல்

உறுதியான நூலில் உயர்ந்த ரத்தினங்கள்போலே

என்பால் கோப்புண்டு வந்தே

என்னிடம் கோர்க்கப்பட்டதாகவே

இது எல்லாம்

இந்த எல்லா உலகமும்

செறிந்து

சிதறிவிடாமல் நெருங்கியிருப்பதாய்

சேமம் உற நிற்கும்

ரக்ஷை பெற்று நிற்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top