Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்த விரண்டு முதலாக வெப்பொருளும்
வந்த பரிசுணர்நீ மன்னவனே—யந்தவகை
தானதனா லெல்லாச் சகத்தின் பிறப்பிறப்பு(ம்)
நானெனவே காணீ நயந்து.       7.6

மன்னவனே!

அரசனே

எப்பொருளும்

இந்த எல்லா உலகும்

இந்த இரண்டும் முதலாக

என்னுடையவையான இந்தச் சேதநாசேதந ஸமஷ்டியைக் காரணமாகக் கொண்டதாய் இருக்கையால்

வந்த பரிசு

என்னையே காரணமாகக்கொண்டு உண்டானவை என்பதை

நீ உணர்

நீ அறிவாயாக

அந்த வகை தான் அதனால்

அப்படி என்னையே காரணமாகக்கொண்டு உண்டானவை ஆகையாலே

எல்லா ஜகத்தின் பிறப்பு இறப்பும்

இந்த எல்லா உலகங்களின் பிறப்பிடமும், இறப்பிடமும்

நான் எனவே

நானேயாக இருக்கிறேன் என்றே,

நீ நயந்து காண்

நீ விரும்பிப்பார்ப்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top