Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மற்றதனில் வேறாகி மன்னுயிராய் மேலாகி
யுற்றதுதா னென்ற னுருவாக-முற்றுமறத்
தாங்குஞ் சகத்திதனைத் தானமைந்து நிற்குமே
யோங்கித் தழைபுயத்தா யுன்னு.      7.5

ஓங்கித் தழை புயத்தாய்!

நீண்டு கைகளை உடையவனே!

மற்றதனில் வேறாகி

மற்று சொல்லப்பட்ட அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாய்

மன் உயிராய்

நிலைபெற்ற உயிராயிருப்பதாய்

மேல் ஆகி உற்றதுதான்

(அசேதநத்தைக் காட்டிலும்) மேற்பட்டதாயிருக்கும் ப்ரக்ருதி

ஜகத்து இதனை

இவ்வுலகத்தை

முற்றும் அறத் தாங்கும்

முழுவதும் நன்றாகத் தாங்குமதாய்

என்றன் உருவாக

என்னுடைய உடலாக

தான் அமைந்து நிற்குமே

தானும் பொருந்தி நிற்கிறது

உன்னு

(இதை யும்) அறிவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top