Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அதிபூத மற்றிங் கதி.தெய்வ மெல்லா
மதியெச்ச நாமா வறிந்தோர்-கதிபெற்றுப்
போம்பொழுது மென்னையே பேராத நெஞ்சரா
யாம்பொருளாக் காண்ப ரமர்ந்து.          7.30

மற்று இங்கு அதிபூதம் அதிதைவம் நாமா அறிந்தோர்

மேலும் இவ்வுலகில் அதி,பூ,தமும் அதி தைவமும் நாமாக அறிந்த ஐஸ்வர்யார்த்தி,களும்

அதியெச்சம் நாமா அறிந்தோர் எல்லாம்

அதி,யஜ்ஞம் நாமே என்று அறிந்த மூவகை அதிகாரிகளும்

கதி பெற்றுப் போம் பொழுதும்

(உபாயாநுஷ்டானம் முடிந்து தத்தமக்குரிய) ப்ராப்யத்தைப் பெறுவதற்காக உடலை விடும் ஸமயத்திலும்

பேராத நெஞ்சராய்

மறக்காத நெஞ்சையுடையவராய்

ஆம் பொருளா அமர்ந்து

தாம் தாம் விரும்பும் பலனுக்குத் தக்கவாறு

என்னையே காண்பர்

என்னையே காண்பார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top