Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா
(ஏழாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம் )

இத்தகவா லேழாமோத் தெந்தை பொருளனைத்து(ம்)
மெய்த்தகையான் ஞானி வியப்புடனே – சுத்தனெனச்
சொன்ன வகையே துளக்கமற வாராய்ந்தே
யின்ன வகைமுடிந்த திங்கு.          7.30A

இத்தகவால்

இம்முறையில்

பொருள் அனைத்தும்

எல்லாப் பொருளையும்

மெய்த் தகையான் ஞானி

உள்ளபடி அறிபவனான ஞானியானவன்

சுத்தன் என எந்தை

சிறந்தவன் என்று கண்ணபிரான்

துளக்கம் அற ஆராய்ந்தே சொன்ன வகையே

ஐயமில்லாமல் ஆராய்ச்சி செய்து சொன்ன ரீதியில்

ஏழாம் ஒத்து

ஏழாம் அத்தியாயம்

இன்ன வகை

இம்முறையில்

இங்கு முடிந்தது

இத்துடன் முடிவுற்றது

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் ஏழாம் அத்தியாயம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top