Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மூப்பிறப்புத் தீர முயன்றென்னை வந்தடைவ
ராப்புறமந் தப்பிரம மாங்கறிவர்-கோப்புடைய
வெவ்வத்தி யாத்துமத்து மெல்லாக் கருமத்துஞ்
செவ்வை தெரிவுறுவர் சேர்ந்து.          7.29

மூப்பு இறப்பு தீர

கிழத்தனம், மரணம் முதலான ஆறு ஊர்மிகளும் அடியோடு கழிந்துப்ரக்ருதி ஸம்பந்த, மற்ற ஆத்மாநுபவரூபமான மோக்ஷம் கிடைப்பதற்காக

முயன்று

முயற்சி செய்கின்றவர்களாய்

என்னை வந்து அடைவர்

என்னைப் பல ப்ரத ஸாதனமாகப் பற்றுகிறவர்கள்

ஆப்புறம்

அதன்பிறகு

அந்தப் பிரமம் ஆங்கு அறிவர்

ப்ரஹ்மம் எனப்படும் அப்பொருளை அதன் பொருட்டு அறியவேண்டும்

கோப்புடைய

கட்டுக்கோப் புடைய

எவ்வத்தியாத்துமத்தும்

அத்யாத்மம் எனப்படும் முழுவதைப் பற்றியும்

எல்லா கருமத்தும்

கர்மம் எனப்படுவது முழுவதைப் பற்றியும்

செவ்வை

உண்மையை

சேர்ந்து தெரிவுறுவர்

( முற்கூறியதோடு) கூடவே அறியவேண்டும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top