Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அன்னபெரு வேள்வியா லாங்கிறைஞ்சப் பட்டமரர்
மன்ன பெரியவள மற்றளிப்ப – ரின்னே
யவர்தந்த போக மவர்ககளியா துண்பான்
கவர்கின்றான் கள்வனே காண்.    3.10

அமரர்

தேவர்கள்

அன்ன பெரு வேள்வியால்

அத்தகைய பெரிய யஜ்ஞங்களால்

ஆங்கு

அந்த யஜ்ஞ பூமிகளிலே

இறைஞ்சப்பட்டு

ஆராதிக்கப்பட்டவர்களாய்

மற்று மன்ன

மேலே தங்களுடைய ஆராதனம் தொடர்ந்து நடைபெறுவதற்காக

பெரிய வளம்

பெரிய போக்கியப் பொருள்களை

அளிப்பர்

கொடுப்பார்கள்

இன்னே

இப்படியாக

அவர் தந்த போகம்

அந்த தேவர்கள் கொடுத்த அப்பொருள்களை

அவர்க்கு அளியாது

(யஜ்ஞங்களைச் செய்வதன் மூலம்) அவர்களுக்குக் கொடுக்காமல்

உண்பான்

தானே சாப்பிடுகின்றவன்

கவர்கின்றான்

அவர்களுடைய சொத்தை அபஹரிப்பவனாய்

கள்வனே காண்

திருடனேயாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top