Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வேள்வி யானீ ரிறைஞ்சிடுமின் வானோரை
யவ்வேள்வி யாலவரு மாக்கத்தா – லெவ்வாறு
மும்மை யளிப்ப ரொருவர்க் கொருவர்நீ
ரிம்மை மறுமையுறு மிங்கு.      3.9

இவ்வேள்வியால்

(எனக்கு ஆராதனமான) இந்த யஜ்ஞத்தால்

நீர்

(என் பிரஜைகளாகிற) நீங்கள்

வானோரை

(என் சரீரமான) தேவர்களை

இறைஞ்சிடுமின்

ஆராதியுங்கள்

அவ்வேள்வியால் அவரும்

அந்த யஜ்ஞத்தால் ஆராதிக்கப்பட்ட அவர்களும்

ஆக்கத்தால்

(அந்ந பாநாதிகளைக்) கொடுப்பதன் மூலம்

எவ்வாறும்

எல்லா வகையிலும்

மும்மை

அறம் பொருள் இன்பங்களை

அளிப்பர்

(உங்களுக்கு) வளரச் செய்வர்

இங்கு

(இவ்வண்ணமாக) இவ்வுலகில்

நீர்

நீங்களும் தேவர்களும்

ஒருவர்க்கு ஒருவர்

ஒருவருக்கு ஒருவர்

இம்மை மறுமை உறும்

இம்மைப் பலன்களையும் அதன் மூலம் மறுமைப் பலனான மோக்ஷத்தையும் அடைவீர்களாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top