Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வேள்வியினின் மிக்கதனை யுண்பார் விடப்படுவ
ரூழ்வினைக ளின்றொடர்ச்சி யுண்ணின்றுங் – கேள்வியிலாத்
தன்னுடம்புக் காகச் சமைத்துண்பார் பாவத்தை
முன்னுடனே யுண்பார் முயன்று.     3.11

வேள்வியினில் மிக்கதனை

(பரமபுருஷாராதனமான) யஜ்ஞத்தில் எஞ்சிநிற்பதை

உண்பார்

புசிப்பவர்கள்

ஊழ்வினையின் தொடர்ச்சியுள் நின்றும் விடப்படுவர்

(ஆத்ம தர்சனத்துக்குத் தடையாக) அநாதிகாலமாகத் தொடர்ந்து வரும் பாபங்களினின்றும் விடுபடுவர்

கேள்வி இலா

சாஸ்திரத்தை மீறுகிறவர்களாய்

தன் உடம்புக்காக முயன்று சமைத்து உண்பார்

தன் சரீரத்தைப் போஷிப்பதற்காக மாத்திரம் முயற்சியுடன் சமைத்துச் சாப்பிடுகிறவர்கள்

முன் உடனே

விரைவிலேயே

பாவத்தை உண்பார்

பாவத்தையே புசிக்கிறார்கள் (பாபபலமான நரகத்தையே அடைவார்கள் என்றபடி)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top