Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வாயுவிசும் புற்றெழுந்து மன்னுமுல கெவ்விடத்தும் 
போயுலவுந் தன்மையது போலவே-யேயுமுல
கென்னிடையி லெல்லா மினிதிருக்கு மென்பதனை
நின்னிடையே சால நினை.       9.6

விசும்பு உற்று எழுந்து

(எதற்கும் ஆதாரமாயிராத) ஆகாயத்தில் இருந்து எழுந்து

மன்னும் உலகு எவ்விடத்தும போய் உலவும் தன்மையது 

காடசியளிக்கும் உலகத்தில எல்லாவிடத்திலும் சென்று ஸஞ்சரிக்கும் தன்மையை உடைய 

வாயுபோலவே

வாயு (என்னையே தாரகனாகவும் நியந்தாவாகவும் கொண்டிருப்பது) போலவே

ஏயும் உலகு எல்லாம்

ஏயும் உலகு எல்லாம்

என்னிடையில் இனிது இருக்கும் என்பதனை

என்னிடத்தில் தரிக்கப்படுவதாய் நியமிக்கப்படுவதாய் இருக்கும் என்னும் விஷயத்தை

நின்னிடையே சால நினை

உன் நெஞ்சில நீ நன்றாக நினைப்பாய் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top