Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மூடர் நராதமர்கண் முன்மாயை யாலறிவின்
பாடழிந்தா ராசுரமாம் பாவஞ்சேர் கேடார்ந்தார்
தீவினையார் நால்வரெனைச் சேருங் கதியதனின்
மேவியுறு வாரல்லர் மிக்கு.        7.15

மூடர், நராதமர்கள்

அறிவிலிகள், மனிசரில் கடையானவர்கள்

முன் மாயையால் அறிவின் பாடு அழிந்தார்

அநாதி மாயையால் அறிவின் பெருமை அழியப்பெற்றவர்

ஆசுரமாம் பாவம் சேர் கேடு ஆர்ந்தார்

அசுரத்தன்மை பொருந்தி நிற்கையாகிற தீமை நிறைந்தவர்

தீவினையார் நால்வர்

(என்று மேன்மேலே ) பாவம் மிக்கவர்களான நாலுவகைப்பட்ட மனிதர்கள்

எனை சேரும் கதி அதனில்

என்னைப் பற்றுகையாகிற இந்த ஶரணாகதியில்

மிக்கு மேவி உறுவார் அலர்

மிகப் பொருந்தியிருப்பதில்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top