Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மாடிழந்தான் மன்னுயிரை வேண்டுணர்வோன் வான்பொருளைத்
தேடியிருப் பான்ஞானஞ் சேர்வுற்றான் – பீடமரு
நல்வினையார் நால்வரிவ ரென்பா னலம்புனையுந்
தொல்வினையாற் சேர்வர் துணிந்து.        7.16

மாடு இழந்தான்

செல்வத்தை இழந்தவன்

வான் பொருளை தேடி இருப்பான்

சிறந்த ஐஸ்வர்யத்தைப் புதிதாக விரும்புமவன்

மன்னு உயிரை வேண்டி உணர்வோன்

நிலையான ஆத்மாவின் அநுபவத்தை விரும்புகிறவன்

ஞானம் சேர்வுற்றான்

(சிறந்த) அறிவை அடைந்தவன்(என்கிற)

பீடுஅமரும் நல்வினையார் இவர் நால்வர்

(மேல்மேல் ) பெருமை பெற்ற புண்ணியம் செய்த இந்த நாலுவகைப்பட்டவர்களும்

துணிந்து

(அப்புண்ணியத்தின் ஏற்றத்தாழ்வுக்குத் தக்கவாறு ஏற்றத்தாழ்வுள்ள அந்த நான்கு பலன்களிலும்) விருப்பங்கொண்டு

நலம் புனையும் தொல்வினை யால்

பழையதான உபாஸநா மார்க்கத்தாலே

என்பால் சேர்வர்

என்னிடம் பக்திசெய்வார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top