Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்தக் குணமயியா மென்றதென் மாயைதன்
சந்தத்தி னிற்கடக்குஞ் சார்வரிதாற் சிந்தையுட
னென்னையடைந் தேயியல்வா னிம்மா யையைக்கடக்க
முன்னையமர்ந் துற்றான் முயன்று.        7.14

இந்த குணமயி என்றது

முற்கூறிய முக்குணமயமான பொருள் என்றது

என் மாயையாம்

என்னுடையதான ப்ரக்ருதியாகும்

தன் சந்தத்தினில்

தன் விருப்பப்படி

கடக்கும் சார்வு அரிது

(இதைக்) கடக்கும் உபாயம் இல்லை

சிந்தையுடன்

(எனக்கேயான) மனத்துடன்

என்னையே அடைந்து

என்னையே உபாயமாகப் பற்றி

முன்னை முயன்று இயல்வான்

முதலில் என்னிடம் பக்தியோகத்தை முயற்சி செய்து அநுஷ்டிப்பவன்

இம்மாயையை கடக்க

இந்த மாயையைத் தாண்ட

அமர்ந்து உற்றான்

பொருந்தி நிற்பவனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top