Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முக்குணஞ்சே ரிப்பொருளான் மோகித்த விவ்வுலக
மக்குணங்க டம்மி லதிமேலாய் – மெய்க்குணங்க
ளொன்றதனி லோர்குறையா தோங்கிறையா மென்னைத்தா
னின்றறிய மாட்டாது நேர்.         7.13

முக்குணம் சேர் இப்பொருளால் மோகித்த இவ்வுலகம்

முக்குணங்களோடு கூடிய இந்தப் பொருள்களாலே மயங்கி நிற்கும் இவ்வுலகினர்

அக்குணங்கள் தம்மில் அதிமேலாம்

அக்குணங்களையும், அவற்றையுடைய பொருள்களையுங்காட்டிலும் மிகவும் மேற்பட்டவனாய்

மெய் குணங்கள் ஒன்று அதனில் ஓர் குறையாது

கல்யாண குணங்கள் ஒன்றிலும் ஒரு குறையும் இல்லாதவனாய்

ஓங்கு இறை யாம் என்னை

ஓங்கி நிற்கும் ஸர்வேஷ்வரனான என்னை

நேர் நின்று தான் அறியமாட்டாது

தாமாக உள்ளபடி அறிய இயலாதவராயுள்ளனர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top