Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இன்ன குணமூன்றி லேய்ந்த பொருளனைத்து
மன்னேயென் றன்மையினால் வாய்ந்ததென-வுன்னுகநீ
யாங்கவையென் பாலே யமைந்திடினும் யானவற்றி
னீங்கலுற நிற்ப னிகழ்ந்து.       7.12

இன்ன

இவைபோலே

குணம் மூன்றில் ஏய்ந்த பொருள் அனைத்தும்

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில் ஒவ்வொன்றை மிகுதியாகக் கொண்ட பொருள்கள் அனைத்தும்

அன்னே

முற்கூறிய பொருள்களைப் போலே

என் தன்மையினால் வாய்ந்தது என

என் ஶக்தியி னால் படைக்கப்பட்டவை என்றும்

ஆங்கு அவை

அத்தகைய அப்பொருள்கள்

என்பாலே அமைந்திடினும்

என்னிடமே பிரிக்கமுடியாதபடி இருந்த போதிலும்

யான் அவற்றில் நிகழ்ந்து

நான்அவற்றில் வியாபித்து

நீங்கல் உற நிற்பன் என

அவற்றோடு ஒட்டற்றும் நிற்பேன் என்றும்

நீ உன்னுக

நீ அறிவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top