Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மண்ணும் புனலும் வளரெரியும் வாயுவுடன்
விண்ணு மனஞ்சேர் வியன்புலனுந்-திண்ணமரு
மானுமாங் காரமுமாய் வந்தவகை யெட்டுடைய
தானவசித் தென்னதுரு வாம்.    7.4

மண்ணும், புனலும்

நிலனும், நீரும்

வளர் எரியும்

விரகிட வளராநிற்கையால் அனலம் எனப்படும் தீயும்

வாயுவுடன், விண்ணும்

வாயுவோடு கூடிய, ஆகாயமும்

மனம் சேர் வியன் புலனும்

மனத்தோடு கூடிய (பதினொரு) வியக்கத்தக்க இந்திரியங்களும்

ஆங்காரமுமாய்

அஹங்காரமுமாக

வந்த வகை எட்டு உடையதான

இப்படி எட்டு வகையை உடையதாயிருக்கும்

அசித்து

அசேதநப்பொருள்

என்னது உருவாம்

என்னுடைய உடலாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top