Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காமங்க ளான வவற்றாற் கருத்தழிந்தார்
சேமமுற வேமற்றைத் தேவதைக-ணாமங்கள்
பற்றிநிய மங்களுடன் பண்டைத்தம் வாசனையா
லுற்றியல்வ ரன்பா லுகந்து.        7.20

பண்டை தம் வாசனையால் உற்று

தமது (முக்குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதிவாஸனையாலே எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்

காமங்களான அவற்றால்

(தம் வாஸனையை ஒட்டி) விரும்பப்படும் அவ்வப் பொருள்களாலே

கருத்து அழிந்தார்

(என் விஷயமான) அறிவு அழியப்பெற்றவர்களாய்

சேமம் உறவே

அந்தந்தப் பொருள்கள் கிடைப்பதற்காக

மற்றை தேவதைகள்

என்னைக்காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களின்

நாமங்கள் பற்றி

(சிவன் இந்திரன் முதலிய) நாமங்களையே பற்றி நின்று

நியமங்களுடன்

(அவரவரையே உகப்பிப்பதற்கு உறுப்பான) நியமங்களைக் கைக்கொண்டு

அன்பால்

(அவர்களிடம்) அன்பாலே

உகந்து இயல்வர்

(அவர்களை) உகப்புடன் ஆராதிப்பர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top