Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

திண்மையினோர் திண்மையுநான் றீதிலாத் தேசுபெறும்
ஒண்மையறு காமரா கம்மொழிந்த வுண்மை
யறஞ்செறியுங் காமநா னாடவர்க ளேறே
சிறந்ததெலா நானாத் தெளி.    7.11

ஆடவர்கள் ஏறே

ஆண்களில் சிறந்தவனே!

தீது இலா தேசு பெறும்

தீமையில்லாத தேஜஸ்ஸை உடையவர்களாய்

ஒண்மை அறு காமராகம் ஒழிந்த

சிறப்பற்ற காம ராகங்கள் நீங்கப்பெற்றவர்களான

திண்மையினோர்

பலமுடையவர்களின்

திண்மையும் நான்

பலமும் நானே

உண்மை

உயிர்களிடத்து

அறம் செறியும் காமம் நான்

தர்மத்தோடு பொருந்திய காமம் நானே

சிறந்தது எ(ல்)லாம்

(இவ்வுலகில் ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவும் காணப் படும்) சிறப்புகள் எல்லாம்

நானா தெளி

நான் என்றே உணர்வாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top