Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எப்பொருட்கும் வித்தா நிலைநின்ற வென்னைநினை
யப்புருடர் புத்தியுநா னாகின்றே னொப்பில்
பிறரொளியை மாய்க்குமப் பேரொளிநா னாவன்
செறிதிணிதோட் பார்த்தா தெளி.     7.10

செறி திணி தோள் பார்த்தா

திரண்டு உருண்ட தோள்களையுடைய குந்தீ புத்திரனே

நிலைநின்ற என்னை

நித்யனை என்னை

எப்பொருட்கும் வித்தா நினை

எல்லாப் பொருள்களிலுள்ள உபாதாந ஶக்தியாக நினைப்பாயாக

அப்புருடர் புத்தியும்

அறிவாளிகளான ஜீவர்களின் அறிவாகவும்

நான் ஆகின்றேன்

நானே ஆகின்றேன்

பிறர் ஒளியை மாய்க்கும்

மற்றவர்களுடைய தேஜஸ்ஸை இல்லை செய்யும்

அப்புருடர் ஒப்பில் அப்பேரொளி நான் ஆவன்

ஒப்பில்லாத தேஜஸ்ஸை உடையவர்களுடைய தேஜஸ்ஸு நானேயாகிறேன்

தெளி

இதை அறிவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top