Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்னொத்த வெவ்விடத்து மன்னா சமமாக 
மன்னொத்த வின்பம வளர்துன்ப – முன்னலுறி
லாங்கவனே சால வதிகனாம் யோகியென
வோங்கறிவார் தாமதிப்ப ருற்று.        6.28

மன்னா

அரசனே!

தன் ஒத்த

(முற்கூறியபடி) தன் ஆத்மாவை ஒத்திருக்கும்

எவ்விடத்தும்

எல்லா ஜீவாத் மாக்களிடமும் உள்ள

மன் ஒத்த இன்பம்

மனிதர்களுக்குரிய இன்பங்களையும்

வளர் துன்பம்

வளர்கின்ற துனபங்களையும்

சமமாக உன்னலுறில்

சமமாகக் கண்டானாகில்

ஆங்கு அவனே

அப்படிப்பட்ட அவனே 

சால அதிகனாம் யோகி என

யோகிகளுக்குள் மிகச்சிறந்தவன் என்று

ஓங்கு அறிவார் தாம்

அறிவிற்சிறந்தவர்கள்தாம்

உற்று மதிப்பர்

நன்கு கௌரவிப்பர் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top