Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

யாதொன்றைப் பெற்றா லதனில்வே றோர்பேறு 
மீதென்று பின்றான் மிகமதியான் – போதமுடன்
மிக்ககதி நின்றான் மிகுதுன்ப மேலிடினுந்
தக்கவதிற் பினசலியான் றான்.     6.20

யாதொன்றை பெற்றால்

யாதொரு யோகத்தைப் பெற்றுவிட்டால்

பின்

யோகத்திலிருந்து ஓய்ந்த நேரத்திலும்

அதினில் வேறோர் பேறு

அதைக் காட்டிலும் வேறொரு பலனை

மீது என்று தான் மிக மதி யான்

சிறந்தது என்று தான் மிகவும் எண்ணமாட்டானோ

போதமுடன்

அறிவுடன்

மிக்க கதி நின்றான்

சிறந்த அந்த யோகத்தில நின்றவன்

பின்

அதிலிருந்து ஓய்ந்து நேரத்திலும்

மிகு துன்பம் மேலிடினும்

பெரிய துன்பத்தை நலிந்தபோதிலும்

தக்க அதில் தான் சலியான்

துன் புறத்தக்க அதிலும் தான் விகாரமற்றிருப்பானோ

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top