Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இன்னேநெஞ் செந்நாளு மென்னிடையிற் சேர்யோகி 
தன்னேர் மனமாக்கித் தானிறுததி – மன்னேர்ந்த 
வானந்த மேலா யமர்சாந்தி யென்னிடையிற்
றானந்த மற்றடையுந் தான்.          6.13

இன்னே

இவ்வண்ணமாக

நெஞ்சு

மனத்தை

எந்நாளும்

எப்போதும்

என்னிடையில் சேர் யோகி

என்னிடம் செலுத்துகின்ற யோகியானவன்

தான் தன் மனம் நேர் ஆக்கி

தானே தன் மனத்தை நிலைபெற்றதாக்கி

நிறுததி

(தன்னிடம் ) நிறுத்தி

மன் நேர்ந்த ஆனந்தமேலாய்

நிலைநிற்பதாய் துன்பங்கலப்பற்ற ஆனந்தத்தின் மேலான நிலையாயிருப்பதாய்

என்னிடையில் அமர் சாந்தி

என்னிடம் இருப்பதான ஷடூர்மிஸாந்தியை

அந்தம் தான் அற்று

நித்யமாக

தான் அடையும்

தானே அடைவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top