Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்காயஞ் சென்னிகளந் தாங்கிச் சலியாமன் 
முன்காண மூக்கைக்கண் மொய்த்ததிசைப் – பின்காணா
தாறியஞ் சாதே யறத்துரனாய் நெஞ்சடக்கித்
தேறியென் பால்விருப்பான சேர்ந்து.         6.12

தன் காயம் சென்னி களம் தாங்கி

தன்னுடைய உடல் தலை கழுத்து ஆகியவற்றை நேரே தரித்து

சலியாமல்

நீண்டநேரம் அசையாமலிருப்பவனாய்

கண் (தன்) முன்மூக்கை காண

கண்ணானது தன்னுடைய மூக்கின் நுனியைப் பார்க்கும்படி இருந்துகொண்டு

மொய்த்த திசை பின் காணாது

சூழ்ந்துள்ள திக்குகளைக்கூடக் காணாமல்

ஆறி

ஆறுதல் பெற்று

அஞ்சாதே

பயமில்லாமல்

அறத்து உரனாய்

ப்ரஹ்மசர்ய தர்மத்தில் உறுதிபூண்டவனாய்

நெஞ்சு அடக்கி

மனத்தை (க்லேங்கள் ஸஞ்சரிக்காதபடி) அடக்கி

தேறி

கவனமுள்ளவனாய்

என் பால் சேர்ந்து

என்னிடம் நெஞ்சை வைத்தவனாய்

விருப்பான்

(என்னை) தியானிக்கக்கடவன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top