Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தானே யிருந்து தனியிடத்துத் தன்சிந்தைக் 
கானா மனமடக்கி யாசையற்றுத் – தானேய்ந்த
வெத்துவக்கு மற்ற வெழில்யோகி தன்னையென்றுந்
தத்துவத்திற் சார்விப்பான் றான்.          6.10

தனி இடத்து

ஜனங்களற்ற தேஸத்தில்

தானே இருந்து

தான் தனியாக இருந்து

தன் சிந்தைக்கு ஆன மனம் அடக்கி

சிந்தை செய்வதற்கென்றே ஏற்பட்ட தன் மனத்தை அடக்கி

ஆசை அற்று

(ஆத்மாவைத் தவிர்ந்த விஷயங்களில்) விருப்பமில்லாதவனாய்

எத்துவக்கும் அற்ற

(அவ்விஷயங்களில்) தன்னுடையது' என்னும் பற்றும் அற்றவனான

தான் ஏய்ந்த எழில் யோகி

தன்னை அநுஸந்திக்கும் (முற்கூறிய) அழகிய கர்மயோகி

தன்னை

தன்னை

என்றும்

தினந்தோறும் யோககாலத்தில்

தத்துவத்தில்

( தன் ஆத்மாவாகிற) தத்துவத்தில்

தான் சார் விப்பான்

தானே ஈடுபடுத்தக்கடவன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top