Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தூயநிலத் தோக்கந்தாழ் வற்றதுகில் தோலதுமே
லாயதுகீ ழாக்குசமா மாசனத்து – மேயதன்
புத்தியொரு மித்துப் புலனடக்கி யோகத்தைச்
சுத்திபெறச் செய்வான் றொடர்ந்து.          6.11

தூய நிலத்து

பரிசுத்தமான இடத்தில்

ஓக்கம் தாழ் வற்ற

மிக உயர்ந்ததாகவும் மிகத் தாழ்ந்ததாகவுமிராததாய்

துகில் தோலது மேலாய் அது கீழாக்குசமாம்

மேலே பட்டுத்துணியும் மான்தோலும் விரிக்கப்பெற்றதாய் அவற்றின் கீழ் தர்ப்பை பரப்பப்பெற்றதான

ஆசனத்து

(மரம் முதலியவற்றாலான) நிலையான ஆஸனத்தில்

மேய தன்

உட்கார்ந்திருக்கும் தன்னுடைய

புத்தி

மனத்தை

ஒருமித்து

ஒருமுகப்படுத்தி

புலன் அடக்கி

மனம் முதலிய எல்லா இந்திரியங்களையும் (பட்டி மேயாதபடி) அடக்கி

சுத்தி பெற

ஸம்ஸாரபந்தம் நீங்குவதற்காக

தொடர்ந்து

தினந்தோறும்

யோகத்தைச் செய்வான்

ஆத்ம தர்ஸனத்தை செய்யக்கடவன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top