Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏலுந் துறவறிவிங் கெய்தவரி தாகுமுனே 
கோலும்யோகத் தக்கருமங் கூடாமல்-மேலுந்தா
னுற்றா னியோக முயர்முனிவன் றாழாமற்
பெற்றான் பிரமவுயிர்ப் பேறு.     5.6

முனே கோலும் யோகத்து அக்கருமம் கூடாமல்

(ஜ்ஞாந யோகத்திற்கு) முன்னதாகவே அவசியம் அனுஷ்டித்தாக வேண்டிய அக்கர்மயோகத்தை அநுஷ்டிக்காவிடில்

இங்கு

இவ்வுலகில்

ஏலும் துறவறிவு

தக்கதான ஜ்ஞாநயோகம்

எய்த அரிதாகும்

அடைய அரிதாயிருக்கும்

மேலும்

இதற்குமேலே

இயோகம் தான் உற்றான்

கர்மயோகத்தை அநுஷ்டிப்பவன்

உயர்முனிவன்

(தானே ) ஆத்மாவை மனனம் செய்யும் உயர்முனிவனாகி

பிரம உயிர்ப்பேறு

பெரிதாகையாலே பிரமம் எனப்படும் ஆத்மாவைக் காண்கை யாகிற பலனை

தாழாமல் பெற்றான்

விரைவிலே அடைந்து விடுவான். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top