Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஒன்றியயோ கத்தா லுளந்தெளிந்து தன்வசமாய் 
வென்றுபுல னெவ்வுயிரு மேவினனாய்-நின்றவவ
னெல்லாக் கரும மியற்றிலு மப்பயன்கள்
செல்லா வவனிடையிற் சேர்ந்து.    5.7

ஒன்றிய யோகத்தால்

(தன்னால்) அநுஷ்ட்டிக்கப்படும் கர்மயோகத்தால்

உளம் தெளிந்து

பரிசுத்திபெற்ற நெஞ்சை உடையவனாய்

உளம் தன்வசமாய்

(அதனாலேயே) உள்ளத் தைத் தன்வசப்படுத்தினவனாய்

புலன்வென்று

(அதனாலேயே) எல்லா இந்திரியங்களையும் வெற்றிகொண்டவனாய்

எவ்வுயிரும் மேவினனாய் நின்ற அவன்

தேவர் மனிதர் முதலான சரீரங்களிலுள்ள எல்லா உயிர்களோடும் ஸாமாநாகாரமாயிருக்கையாலே தன் உயிரை அவற்றோடு ஒன்றாக அநுஸந்திப்பவனாய் நிற்பவன்

எல்லா கருமம் இயற்றிலும்

எல்லாக் கருமங்களையும் அநுஷ்டித்து வந்தாலும்

அப் பயன்கள்

அக்கர்மங்களின் பலன்கள்

அவனிடையில் சேர்ந்து செல்லா

அவனிடத்தில் ஒட்டியிருக்கமாட்டா

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top