Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நல்லார்க டம்மை நலம்புரிந்து காத்தற்கும் 
பொல்லாரைப் பொன்றுநெறி போக்கற்குஞ் – சொல்லாரு  
முந்தை யறநாட்ட முய்த்தற்கு நான்பிறப்
பனிந்தவுகந் தோறு மிசைந்து.     4.8

நல்லார்கள் தம்மை

நல்லவர்களை

நலம் புரிந்து

என் ரூபகுணச்செயல்களை அளித்து

காத்தற்கும்

ரக்ஷிப்பதற்கும்

பொல்லாரை

தீயவர்களை

பொன்று நெறி போக்கற்கும்

அழியும் வழியிலே செலுத்துவதற்கும்

சொல் ஆரும்

வேதங்களில் சொல்லப்பட்ட

முந்தை அறம்

பழையனவான தர்மாநுஷ்டானங்களை

நாட்டம் உய்த்தற்கும்

நிலைபெறச் செய்வதற்கும்

நான்

ஸர்வேஸ்வரனான நான்

இந்த உகம் தோறும்

கிருதம், த்ரேதா, த்வாபரம், கலி என்னும் இந்த நாலு யுகத்திலும்

இசைந்து

பலவகையான உருவங்களையும் ஏற்றுக்கொண்டு

பிறப்பன்

அவதரிப்பேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top