Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அறந்தளரு மக்கால மெக்கால மாங்கே 
மறங்கிளர்ந்து பாவm வளரும் – பிறங்கரசர் 
வெந்நைத் தருவிக்கும் வில்லிசயா வக்காலத் 
தென்னைப் பிறப்பிப்பன் யான்.     4.7

பிறங்கு அரசர் வெந்நைத் தருவிக்கும் வில்விசயா

பகையரசர்கள் முதுகுகாட்டி ஓடும்படி செய்கின்ற வில்லையுடைய அர்ஜுனனே!

எக்காலம்

எந்தக் காலத்தில்

அறம் தளரும்

தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுமோ

அக் காலம்

அக்காலத்திலும்

மறம் கிளர்ந்து பாவம் வளரும்

(எந்தக்காலத்தில்) அதர்மம் எழுச்சிபெற்றுப் பாபங்கள் அதிகமாகுமோ

அக்காலத்து

அந்தக் காலத்திலும்

என்னை

என்னையே

யான்

நான்

பிறப்பிப்பன்

அவதரிக்கும்படி செய்துகொள்வேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top