Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மேவுபிறப் பில்லனுமாய் மெய்த்தன்மை குன்றானாய் 
மூவுலகுக் கெண்ணு முறையிறையாந் – தேவுடனே 
யென்னுடைய மூர்த்தியினையெய்தியே யென்னினைவு 
தன்னியல்வா லேபிறப்பன் சார்ந்து.     4.6

மேவு பிறப்பு இல்லனுமாய்

(கர்மத்தால்) ஏற்படும் பிறப்பு இல்லாதவனாய்

மெய் தன்மை குன்றானாய்

அழியாதிருக்கும் இயல்வை விடாதவனாய்

மூவுலகுக்கு எண்ணும் முறை இறையாம்

மூவுலகத்திற்கும் ஒருவனாக எண்ணப்படும் இயற்கையான ஈஸ்வரனாயிருக்கும்

தேவுடனே

பரத்வத்துக்குரிய தன்மைகளோடு கூடவே

என்னுடைய மூர்த்தியினை எய்தியே

என்னுடைய மூர்த்தியினை எய்தியே

என் நினைவு தன் இயல்வாலே

இப்பிறவிகளின் தன்மைகள் அனைத்தையும்

சார்ந்து பிறப்பன்

எல்லா விதமான பிறப்புக்களையும் எடுத்துக் கொள்கிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top