Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இன்னே பரம்பரையா லேய்ந்ததனை யீங்கறிவர் 
முன்னே யரைச முனிவர்கள் – பின்னேபோய்க் 
காலத்தி னான்மறைந்து கைகழிந்து விட்டதே 
ஞாலத்தில் யோக நலம்.      4.2

இன்னே

இவ்வண்ணமாக

பரம்பரையால் ஏய்ந்ததனை

உபதேச பரம்பரையாக அடையப்பட்டு வந்த இக்கர்ம யோகத்தை

முன்னே அரைச முனிவர்கள்

முற்காலத்திலிருந்த (ஜனகர் முதலிய) ராஜரிஷிகள்

ஈங்கு அறிவர்

இவ்வுலகில் அறிந்து வந்தனர்

பின்னே

பிற்காலத்தில்

யோக நலம்

இத்தகைய சிறப்புடைய கர்மயோகம்

ஞாலத்தில்

இவ்வுலகில்

காலத்தினால் மறைந்து போய் கைகழிந்து விட்டதே

காலத்தின் நெடுமையினால் (உபதேசபரம்பரை யில்லாமல்) மறைந்து போய் அழிந்து விட்டது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top