Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

போதமிகு மிந்தப் புராதனமாம் யோகத்தை 
யேத மறவுனக்கிங் கியானுரைத்தேன்-காதலமர் 
பத்தனுமாய்த் தோழனுமாம் பண்பான் மறைப்பொருளா 
முத்தமமீ தென்றோர்ந் துகந்து.      4.3

போதம் மிகும்

(ஆத்மஸ்வரூபஜ்ஞானத்தோடு) மிகக் கலந்த

புராதனமாம் இந்த யோகத்தை

பழையதான இக் கர்மயோகத்தை

மறைப்பொருளாம் உத்தமம் ஈது என்று ஓர்ந்து

வேதத்தில் பொதிந்துள்ள சிறந்த ரஹஸ்யம் இது என்று ஆராய்ந்து

காதல் அமர் பத்தனுமாய்

(என்னிடம் நீ) காதல் நிறைந்த பக்தனுமாய்

தோழனும் ஆம் பண்பால

தோழனுமாயிருக்கும் தன்மையை நோக்கி

உகந்து பிரீதியுடன்

உகந்து பிரீதியுடன்

உனக்கு

உனக்கு

இங்கு

இப்போது

ஏதம் அற

குறைவில்லாமல்

யான் உரைத்தேன்

நான் உபதேசித்தேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top