Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆதலா னீபரதா வாதியிலே வைம்புலனைக்
காதி யுனதறிவு கட்டழித்து – மீதியலிப்
பாவத்தை நீக்கும் படிபா ரதுதன்னா
லாவத் தவைதரா வாங்கு      3.34

பரதா

பரதகுலத்துதித்தவனே!

ஆதலால்

முற்கூறிய படி ஞானயோகம் செயற்கரியதாகையால்

நீ

(பரக்ருதி ஸம்பந்தமுடையவனாகையாலே இந்திரிய வ்யாபாரத்திலேயே இயற்கையில் இழியும்) நீ

ஆதியிலே

மோக்ஷோபாயத்தைத் தொடங்கும்போதே

ஐம்புலனை

ஐந்து ஞானேந்திரியங்களையும்

காதி

(கர்மயோகத்தில்) ஈடுபடுத்தி

உனது அறிவு கட்டழித்து

உன்னுடைய ஆத்ம ஜ்ஞானத்தை அடியோடு அழித்து

மீது இயல் இப்பாவத்தை

உன்னை வெற்றிகொண்டு வரும் எதிரியான இக்காமத்தை

நீக்கும்படி பார்

அழிக்கும் வழியைக் காண்பாயாக

அது தன்னால்

இதை அழித்து விட்டால்

ஆங்கு

மோக்ஷோபாயாநுஷ்டானத்தில்

ஆவத்து அவை தரா

முற்கூறிய ஆபத்துக்கள் ஏற்படமாட்டா

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top