Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புலன்கண் மனமதுவாம் புத்திநிலை யாகு
மலங்கொளிதற் கென்பர் மதித்தோர்-சலங்கிளரு
மின்னவிது தானிவற்றா லீங்கிவனைத் தான்மயக்கு
மன்னறிவு தன்னை மறைத்து.       3.33

மதித்தோர்

அறிவாளிகள்

மலங் கொள் இதற்கு

தாழ்ந்த விஷயங்களை விழுங்கும் இக்காமத்திற்கு

புலன்கள்

இந்திரியங்களும்

மனம் அதுவாம்

அவ்விந்திரியங்களை நியமிக்கும் மனமும்

புத்தி

(விஷயாநுபவத்தில்) உறுதியும்

நிaலையாகும்

(ஆத்மாவைப்) பற்றி நிற்பதற்கு உபகரணங்களாகும்

என்பர்

என்று கூறுவர்

சலம் கிளரும் இன்ன இது தான்

தோஷம் பொங்கி யெழும் இத்தகைய இக்காமயே

ஈங்கு

சரீரத்தோடு இவன் கூடியிருக்கும் நிலையில்

இவனைத் தான்

இந்த ஜீவனையே

இவற்றால்

இந்திரியங்கள் மனம் உறுதி என்னும் இம் மூன்று கருவிகளாலும்

மன் அறிவு தன்னை மறைத்து

நிலையான ஆத்மாவைப்பற்றிய அறிவை மறைத்து

மயக்கும்

மயங்கச் செய்யும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top