Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தூமத்தா லங்கி சுணையழுக்காற் கண்ணாடி
காமக் கருவுற்பக் கட்டதனா-லேமத்துச்
சூழ்வுற்ற தென்னவே சூழப்பட்டிங்கதனாற்
றாழ்வுற்ற திச்செந்துத் தான்.         3.31

தூமத்தால் அங்கி

புகையால் நெருப்பும்

சுணை அழுக்கால் கண்ணாடி

சுணை அழுக்கு முதலானவற்றால் கண்ணாடியும்

காமக்கரு

ஆண் பெண் காமத்தால் உண்டான கர்ப்பம்

உற்பக்கட்டு அதனால்

கருப்பையாகிற கட்டினாலும்

ஏமத்து சூழ்வுற்றது என்னவே

நன்றாக மூடப்பட்டிருப்பதுபோலே

இச்செந்துதான்

இந்தச் சேதனவஸ்துவானது

இங்கு

இந்த ஸம்ஸார மண்டலத்தில்

அதனால்

(முற்கூறிய) காமத்தால்

சூழப்பட்டு

மூடப்பட்டு

தாழ்வுற்றது

தாழ்வை அடைந்துள்ளது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top