Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காம மிதுதான் கடுங்கோ பமுமாகித்
தீமை நடுக்குணத்துச் சேர்ந்துதிக்கு- மாமதெல்லாம்
வாரி யுடன்புசிக்கு மாபாவ மாமிதனை
வைரி யெனவே மதி.        3.30

இதுதான்

நீகேட்ட (விஷயாநுபவ) காரணம்தான்

காமம்

காமமேயாகும்;

இதுதான்

இக்காமமே

கடும் கோபமும் ஆகி

(தடைபட்டபோது தடைசெய்தவர்களிடம்) கடுமையான கோபமாகவும் உருவெடுத்து

தீமை தீமை நடுக் குணத்து சேர்ந்து உதிக்கும்

(முக்குணங்களில்) தீமை செய்யும் நடுக்குணமான ரஜோ குணத்திலிருந்து உண்டாகும்

ஆமது எல்லாம் வாரி உடன் புசிக்கும்

(இக்காமமானது) கிடைக்கும் விஷயங்கள் அனைத்தையும் வாரி வாரி விழுங்கிக் கொண்டேயிருக்கும்

மா பாவம் ஆம்

(தடைபட்டுக் கோபமாக உருவெடுக்கும் போது) பெரும் பாவச்செயல்களையும் புரியும்

இதனை

(ரஜோகுணத்தால் உண்டாவதாய், கோபமாக உருவெடுப்பதான) இக்காமத்தை

வைரி எனவே மதி

(இந்த ஜ்ஞானயோகத்திற்கு) எதிரி என்றே எண்ணுவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top