Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பிறந்தவனுக் காங்கிறத்தல் பின்னறுதி யவ்வா
றிறந்தவனுக் கும்பிறப்பு மெய்துந் – திறந்தன்னா
லொன்றும் பரிகார மில்லா வொருபொருட்கு
நின்று மனந்தளரேனீ.      2.26

பிறந்தவனுக்கு

உண்டான சரீரத்திற்கு

ஆங்கு

அந்த ஜந்மத்தில்

பின்

பின் ஒருகாலத்தில்

இறத்தல்

இறந்து போவது என்பது

அறுதி

நிச்சயம்

அவ்வாறு

அப்படியே

இறந்தவனுக்கும்

அழிவடைந்த சரீரத்திற்கும்

பிறப்பும்

மறுபிறப்பும்

எய்தும்

வந்தே தீரும்

திறம் தன்னால்

இத்தன்மையாலே

ஒன்றும் பரிகாரம் இல்லா ஒரு பொருட்கு

எவ்விதத்திலும் தவிர்க்கமுடியாத இவ்விஷயத்தில்

நீ

நீ

நின்று

நிலைநின்று

மனம் தளரேல்

மனத்தைத் தளரவிடாதே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top