Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பூதங்க ளான புணர்ச்சி முதல்விளங்கா
சாதனங்க ளானவிடை தான்விளங்கு – மீதங்குப்
பொன்றுநிலை தான் விளங்கா போக்கா மதில்வெறுப்பென்
இன்றதனைக் கேளின்ன நீ.   2.27

பூதங்களான புணர்ச்சி

ஐந்து பூதங்களின் கூட்டினால் உண்டான சரீரங்கள்

முதல் விளங்கா

முன் நிலை விளங்காமல் உள்ளன

சாதனங்கள் ஆன இடைதான்

(போக மோக்ஷங்களுக்கு) சாதனங்களாய் உள்ள (அவற்றின்) நடு நிலைதான்

விளங்கும்

விளங்குகிறது

மீது

மேலே

அங்கு

மரணகாலத்தில்

பொன்று நிலைதான் விளங்கா

அழிந்தபின் ஏற்படும் நிலையும் விளங்கவில்லை

போக்காம் அதில்

நிலைநில்லாமையாகிற இத்தன்மையில்

வெறுப்பு என்

துன்பம் எதற்காக?

இன்று

இன்று

அதனை

(சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்ட) ஆத்மாவின் பெருமையை

நீ

நீ

இன்னம்

மேலும்

கேள்

கேட்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top