Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இத்தன்மை யன்றியிவ னென்றும் பிறந்திறக்கு
மத்தன்மை யாக வறிதியோ – சித்தந்
தளரும் படியிங்ஙன் றான்வெறுக்க வேண்டா
வளருந் திரடோளாய் மற்று.   2.25

வளரும் திரள் தோளாய்

நீண்டு வளர்ந்து திரண்டிருக்கும் கைகளையுடைய அர்ஜுனா!

மற்று

முற்கூறியபடியல்லாமல்

இவன்

இவ்வாத்மாவை

இத்தன்மை அன்றி

நித்தியத் தன்மையற்றவனாய்

என்றும் பிறந்து இறக்கும் அத்தன்மை ஆக

என்றும் பிறப்பதும் இறப்பதும் செய்யும் தன்மையை யுடைய சரீரமாகவே

அறிதியோ

அறிகின்றாயோ? (அப்படி அறிந்தாலும்)

சித்தம் தளரும்படி

நெஞ்சு குலையும்படி

இங்ஙன்தான்

இவ்வண்ணமாகத்தானே

வெறுக்க வேண்டா

வருத்தத்தை அடையவேண்டாமே!

24, 25 சுலோகங்களுக்கு 24-வது வெண்பாவே மொழி பெயர்ப்பாய் அமைந்திருக்கிறது. ''அச்சேத்ய: அதாஹ்ய: அக் லேத்ய: அசோஷ்ய: அவிகார்ய:" என்னும் பதங்களுக்கு,"அவ்வவற்றால் ஏதுமழியான்” என மொழிபெயர்ப்பு.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top