Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அவ்வவற்றா லேது மழியா னிவனென்று
மெவ்விடத்துந்தாணுவா யேய்ந்தசைவற் – றிவ்வகையென்
றாதுந் தெரியா னறிவரியா னென்றறிந்து
யாதுந் துயரேனீ யிங்கு.   2.24

அவ்வவற்றால்

ஆயுதம் அக்னி ஜலம் வாயு என்னும் இவற்றால்

ஏதும்

வெட்டப்பட்டோ, எரிக்கப்பட்டோ, கரைக்கப்பட்டோ, உலர்த்தப்பட்டோ

இவன்

ஆத்மா

அழியான்

அழியமாட்டான்

என்றும்

எல்லாக்காலத்திலும்

எவ்விடத்தும் ஏய்ந்து

எல்லாவிடத்திலும் வியாபித்து

தாணு வாய்

நிலையான தன்மையை உடையவனாய்

அசைவற்று

அசைக்கமுடியாதவனாய்

இவ்வகை என்று

இப்படிப்பட்டது என்று

ஆதும் தெரியான்

(எவராலும்) எவ்வகையிலும் அறிய முடியாதவனாயிருப்பான்

அறிவு அரியான்

(எவராலும்) நினைக்கவும் முடியாதவன்

என்று அறிந்து

என இவ்வண்ணமாகத் தெளிந்து

நீ

(அர்ஜுனனாகிற) நீ

இங்கு

இவ்விஷயத்தில்

யாதும் துயரேல்

யாதும் துயரேல்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top