Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காம மவையனைத்துங் கைவிட் டவணசையற்
றேமமுற யானெனதென் றிவ்விரண்டி – னாம
மறத்துறந்து நின்றா னவன்கண்டாய் சாந்தி 
பெறப்பயின்று நின்றான் பெரிது.    2.63

காமம் அவை அனைத்தும் கைவிட்டு

சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் கைவிட்டு

அவண்

அவற்றில்

நசை அற்று

ஆசையற்று

யான் எனது என்று இவ்விரண்டின் நாமம் அற துறந்து

அஹங்கார மமகாரங்களாகிற இரண்டையும் வாஸனையும் நீங்கும் படி விட்டு

ஏமம் உற நின்றான்

ஆத்ம தர்சனமாகிற நன்மை கைகூடும்படி நின்றவனான

அவன் கண்டாய்

அவனேயன்றோ

சாந்தி பெற

விஷயாநுபவம் நீங்கப் பெறுகையாகிற சாந்தியை அடைய

பெரிது பயின்று நின்றான்

மிகவும் முயற்சி செய்து நிற்பவன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top