Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நிறைந்து நிலைசலியா நீள்கடல்வாய் நீர்யா
றுறைந்த வகையதுபோ லுள்ளே – மறைந்தெவன்பால் 
காமங்க ளெல்லாங் கரக்குமவன் சாந்திபெறு
மேமம் பெறான்காமி யிங்கு.      2.62

நிறைந்து

தானே நிறைவு பெற்று

நிலை சலியா

ஒரே நிலையிலிருப்பதான

நீள் கடல் வாய்

சமுத்திரத்தினிடத்திலே

யாறு நீர்

ஆற்று நீர்கள்

உள்ளே மறைந்து உறைந்த வகை அதுபோல்

உள்ளே மறைந்து அதற்கு யாதொரு விகாரத்தையும் விளைக்காமல் நிற்கும் தன்மைபோல்

எவன் பால்

எந்த மனிதனிடம்

காமங்கள் எல்லாம்

சப்தாதி விஷயங்கள் அனைத்தும்

உள்ளே மறைந்து கரக்கும்

உட் புகுந்து யாதொரு விகாரத்தையும் விளைக்காமல் மறைந்து நிற்குமோ

அவன்

அந்த மனிதன்

சாந்தி பெறும்

 விஷயாநுபவங்கள் நீங்கப்பெறுகையாகிற சாந்தியை அடைவான்

இங்கு

இவ்வுலகில்

காமி

சப்தாதி விஷயங்களை விரும்பி விகாரமடைபவன்

ஏமம் பெறான்

(முற்கூறிய சாந்தியாகிற) நன்மையை அடையமாட்டான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top