Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அவ்வளவி லந்த வருச்சுனனு மண்ணலைப்பார்த்
தெவ்வகையாம் பாட்ட னெழிற்குருவா – மிவ்வவரைப்
பூசிப்ப தன்றிப் பொருவதேதம் பாலென்று
வாசிப் படவுரைத்தான் மற்று.   2.4

அவ்வளவில்

இப்படிக் கண்ணன் உரைத்தவளவில்

அந்த அருச்சுனனும்

அந்த அர்ஜுனனும்

அண்ணலைப் பார்த்து

புருஷோத்தமனைப் பார்த்து

பாட்டன்

பாட்டனாகிற பீஷ்மர்

எழில் குருவாம் இவ்வவரை

அழகிய ஆசாரியரான துரோணர் ஆகிய இவர்களை

யாம்

நாம்

பூசிப்பது அன்றி

பூஜிக்கலாமேயல்லாமல்

எவ்வகை அம்பால் பொருவது ஏது

எந்தவிதமான அம்பாலும் சண்டை புரிவது எப்படி?

என்று

என்று

வாசிபட உரைத்தான்

போர்புரிய நிற்பவர்களின் பெருமை தெரியும்படியாகச் சொன்னான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top