Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்த வலித்தனததை யெய்தாதே யீதுன்பால்
வந்தணைவ தல்லகாண் மன்னவனே – குந்தி
சிறுவனே நெஞ்சிளைப்பாஞ் சிற்றியல்பை நீங்கி
யுறுவதே கொண்டெழுநீ யுற்று.   2.3

குந்தி சிறுவனே! மன்னவனே!

குந்தியின் பிள்ளையான அரசனே!

இந்த அலித்தனத்தை எய்தாதே

இந்தப் பேடித் தனத்தை அடையாதே !

ஈது

இது

உன்பால்

உன்னிடம்

வந்து அணைவது அல்லகாண்

வந்து அடையுக்கூடியதல்லகாண்!

நெஞ்சிளைப்பாம சிற்றியல்பை

மனவலியின்மையாகிற தாழ்ந்த தன்மையினின்றும்

நீங்கி

நீங்கப்பெற்று

உறுவதே கொண்டு

அடையத்தக்க மனோபலத்தையே கொண்டு

உற்று

(உன்னிருப்பிடத்தை) அடைந்து

எழு

(போர்புரிய) எழுந்திருப்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top