Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புன்பயனாற் பூத்தவுரை போதப் புகல்வரறி
வென்பதனை யில்லா ரெழின்மறையி னன்பகருஞ்
சொற்பயனே பற்றியதிற் றொல்பொருண்மற்றில்லென்பார்
கற்பதனைக் காணாதார் கண்.         2.38

(காம்யகர்மங்களில் ஈடுபட்டவர்கள்) புன் பயனால் பூத்த உரை

பயனின்மையாலே காய்க்காத பூப்போன்ற வார்த்தையை

போத புகல்வர்

மிகவும் பேசுவர்

அறிவு என்பதனை இல்லார்

அறிவற்றவர்கள்

எழில் மறையில் நன் பகரும் சொல் பயனே பற்றி

அழகிய வேதத்தில் (ஸ்வர்க்காதிகளைப் பற்றி) நன்றாகச் சொல்லப்படும் சொல்லாகிற பயனையே பற்றி நின்று

மற்று

அதைக்காட்டிலும் சிறந்த

அதில் தொல் பொருள்

வேதத்தின் பழைமையான தாத்பர்யார்த்தமான மோக்ஷத்தை

இல் என்பார்

இல்லை என்று கூறுவார்கள்

கற்பதனை கண் காணாதார்

(வேதத்தின் உத்தரபாகத்தில்) கற்கப்படும் மோக்ஷத்தைக் கண்ணாலும் காணமாட்டார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top