Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

செய்தவறங் குன்றாது சேரா தவஞ்சிறிது
மெய்தருமங் காக்கு மிகுபயத்திற்— பொய்தவிரும்
புத்திதீர் வொன்றாகும் புன்மைப் பலநினைவா
மத்திறந்தீர் வில்லா தவர்க்கு.         2.37

செய்த அறம் குன்றாது

(கர்மயோகத்தில்) செய்யப்பட்ட அம்சத்திற்கு அழிவில்லை

அவம் சிறிதும் சேராது

(இடையில் விட்டாலும்) தோஷம் சிறிதும் சேராது

எய்(த) தருமம் மிகு பயத்தில் காக்கும்

அடைந்த கர்மப்பகுதியும் பெரியதான ஸம்ஸார பயத்தினின்றும் காக்கும்

பொய் தவிரும் தீர்வு புத்தி ஒன்றாகும்

தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவைப்பற்றிய நிச்சயத்தை முன்னிட்ட கர்மயோக புத்தி (மோக்ஷமாகிய ஒரே பலனைப் பற்றியதாகையால்) ஒன்றாகும்

அத்திறம் தீர்வு இல்லாதவர்க்கு

அத்தகைய ஆத்ம ஸ்வரூப நிச்சயம் இல்லாதவர்களுக்கு

நினைவு புன்மை பலவாம்

நினைவுகள் கீழ்ப்பிரிவுகளோடு கூடிப் பலவாயிருக்கின்றன

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top