Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆயுதங்க ளாங்கிவனைச் சேதியா வன்னவகை
தீயு மவனைத் தெகியாது – பாயு
ஞ்சலத்தாறு மற்றவனைத் தான்கரைக்க மாட்டா
துலர்த்தாது மாருதமு முற்று.   2.23

ஆங்கு

தேஹம் அழியும்போது

அவனை

ஆத்மாவை

ஆயுதங்கள்

கத்தி முதலான ஆயுதங்கள்

சேதியா

வெட்ட மாட்டா

அன்னவகை

அவ்வழியிலேயே

தீயும்

நெருப்பும்

அவனை தெகியாது

ஆத்மாவை எரிக்கமாட்டாது

மற்று

மேலும்

அவனை

அவ்வாத்மாவை

பாயும் சலத்து ஆறு தானும்

பாய்கின்ற நீரையுடைய ஆறுதானும்

கரைக்கமாட்டாது

கரைக்கவல்லதன்று

மாருதமும்

காற்றும்

உற்று

(அவனை) அடைந்து

உலர்த்தாது

உலர்த்தமாட்டாது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top