Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எத்தாலே யுன்னைத் தகாவிடத்தே யிக்கலக்கஞ்
சத்தானார் சாராது சார்ந்ததுதா – னித்தாலே
மேலுலக மில்லை மிகுபழியாம் பார்த்தனே
யேலுமதன் றேகா ணிது.      2.2

பார்த்தனே!

அர்ஜுனனே!

சாத்தனார் சாராது

நல்லவர்களை வந்தடையாததான

இக்கலக்கம்

இந்தக்கலக்கம்

தகா இடத்தே

தகாத இடத்தில்

எத்தாலே உன்னைச் சாந்ததுதான்

எதனால் உன்னை வந்தடைந்தது?

இத்தாலே

இதனாலே

மேல் உலகம் இல்லை

மேலுலகங்கள் இல்லாமற்போகும்

மிகு பழி ஆம்

மிகுந்த பழி உண்டாகும்

இது

இக்கலக்கம்

ஏலு மது அன்றே காண்

ஏற்றுக்கொள்ளக்கூடியது அன்றல்லவோ?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top